இலங்கையில் மீண்டும் ஒன் அரைவல் வீசா சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இன்று நள்ளிரவு முதல் மொபிடல் நிறுவனத்தினால் ஒன் அரைவல் வீசா அனுமதி வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த இலங்கை சுற்றுலாத் துறைக்கு பெரும் நிவாரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு விசா வழங்கும் இலங்கை வீசா கையாளுகை தொடர்பான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த அனுமதி காரணமாக சுற்றுலா பயணிகள் பெரும் அசெகரியங்களை எதிர் நோக்கியதாகவும் கூடுதல் கட்டணங்கள் அறவீடு செய்யப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், சப்பிக்க ரணவக்க மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் நேற்றைய தினம் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தது.
வெளிநாட்டு நிறுவனத்தின் விசா நடைமுறையை ரத்து செய்து முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த மொபிடெல் நிறுவன வீசா அனுமதி முறையை பின்பற்றுமாறு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
எனினும் இந்த நீதிமன்ற உத்தரவை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய நடைமுறைப்படுத்த தவறியிருந்தார்.
இதன் காரணமாக நீதிமன்றம் அவருக்கு நேற்றைய தினம் விளக்கமறியல் உத்தரவு வழங்கியிருந்தது.
இந்த மொபிடெல் நிறுவனத்தின் ஒன் அரைவல் வீசா நடைமுறை எளிமையானதும் சுலபமானதுமான முறை என தெரிவிக்கப்படுகிறது.
புதிய நடைமுறையானது சுற்றுலா பயணிகளுக்கு அணுகூலமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் ஒன் அரைவல் வீசா நடைமுறை மாற்றம் தொடர்பில் இதுவரையில் அரசாங்கத் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.