சுவிஸ் எயார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்று தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திரைப்படம் எதிர்வரும் 2026ம் ஆண்டு இந்த திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
சுமார் 26ஆண்டுகளுக்கு முன்னதாக சுவிஸ் எயார் 111 இலக்க விமானம் விபத்துக்குள்ளானது.
கனடிய கரையோரப் பகுதியில் விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் பயணம் செய்த 229 பேர் உயிரிழந்தனர்.
1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் திகதி சுவிஸ் எயார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளானது.
சுவிட்சர்லாந்து வரலாற்றில் மிகவும் மோசமான விமான விபத்து என இந்த விபத்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் கனடாவில் இந்தப் படம் காட்சிப்படுத்தப்பட உள்ளது.