இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பழைய முறையின் அடிப்படையில் வீசா பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெரும் பிரச்சினையாக மாறியிருந்த வீசா வழங்கும் நடைமுறையில் உடன் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பிரஜைகள் இன்று நள்ளிரவு முதல் ஒன் அரைவல் மற்றும் ஒன் லைன் வீசா என்பனவற்றை பழைய முறையில் கீழ் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.வெளிநாட்டுப் பிரஜைகள் இன்று நள்ளிரவு முதல் ஒன் அரைவல் மற்றும் ஒன் லைன் வீசா என்பனவற்றை பழைய முறையில் கீழ் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நிறுவனமான வீ.எப்.எஸ் க்ளோபல் நிறுவனத்திற்கு வீசா வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதனால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதன் ஊடாக பாரியளவில் நிதி மோசடிகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் வீசா வழங்கும் நடைமுறை குறித்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கியுள்ளது.
இதன்படி, வீ.எப்.எஸ் க்ளோபல் நிறுவனத்தின் வீசா நடைமுறைகளுக்கு பதிலாக முன்னதாக மொபிடெல் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட வீசா நடைமுறை மீள அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பழைய முறையை அமுல்படுத்துமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மீறியமைக்காக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஸ இலுக்பிட்டியவிற்கு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புதிய வீசா நடைமுறை குறித்து விஜித ஹேரத் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.