சுவிட்சர்லாந்தில் சுகாதார காப்புறுதி கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு சராசரியாக இந்த கட்டணங்கள் ஆறு வீதத்தினால் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சராசரி மாதாந்த காப்புறுதிக் கட்டணம் 378 சுவிஸ் பிராங்குகளாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து பொது சுகாதார அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த அதிகரிப்பானது கடந்த இந்த ஆண்டை விடவும் குறைவானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் சுகாதார காப்புறுதி கட்டணங்கள் 8.7 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டு இருந்தது.
வயது வந்தவர்களின் காப்புறுதி கட்டணத் தொகை சுமார் 25 பிராங்குகளினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இளம் தலைமுறையினரின் கட்டணங்கள் சுமார் 16 பிராங்குகளினால் அதிகரிக்கப்படும் எனவும் சிறுவர்களுக்கான காப்புறுதிக் கட்டணம் சுமார் 6.5 பிராங்குகளினால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.