சுவிட்சர்லாந்தின் பேர்ன் கான்டனின், ஒபர்லாண்ட்டின் முரென் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்து நிலநடுக்கவியல் நிறுவனம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
3.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கவியல் ஆய்வு மையத்திற்கு இந்த அதிர்வு பதிவாகியுள்ளது.
இவ்வாறான ஓர் குறைந்தளவான ரிச்டர் அளவினைக் கொண்ட நிலநடுக்கத்தினால் சேதங்கள் ஏற்படாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிலர் வீடுகளில் நில நடுக்கத்தை உணர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.