வீட்டு பனிப் பெண்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
சுமார் 46 வயதான சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
குறித்த நபருக்கு ஒன்பது மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விட்டு பணிப்பெண்களுக்கு பல்வேறு வழிகளில் சித்திரவதைகளை புரிந்ததாக சுவிஸ் பிரஜை மற்றும் அவரது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மனைவி ஆகிய இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இந்த துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறித்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கும் அவரது பிலிப்பைன்ஸ் நாட்டின் மனைவிக்கும் சூரிச் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
சட்டவிரோத கடத்தல் மனித கடத்தல் மற்றும் மோசடி ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த மூவருக்கும் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
வீட்டுப் பணிப்பெண்களை விலங்கு இட்டதாகவும் பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்ததாகவும் இருவருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரபட்டிருந்தது.
தாங்கள் சித்திரவதைகளில் ஈடுபட்டதனை குறித்த தம்பதியினர் என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.
இதனால் நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை விதித்துள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவருக்கும் 16 ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் நட்டையீடாக வழங்குமாறு உத்தரவிடப்பட்டதுடன் தொடர்புடைய சுவிஸ் பிரஜைக்கு 9 மாதங்களும் பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு 5 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.