ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு தெற்காசிய பயண விருதுகள் (SATA) 2024 இல் விருந்தினர் தெரிவு விருதுகள் பிரிவின் கீழ் தெற்காசியாவின் முன்னணி சர்வதேச விமான சேவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கௌரவமான பிரிவின் கீழ் இரண்டாவது தடவையாக தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்துள்ளது.
தெற்காசியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் விமான சேவை மற்றும் விருந்தோம்பலின் நிகரற்ற மரபினை ஶ்ரீலங்கன் விமான சேவை பிரதிபலிப்பதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் 85 வீத சேவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீலங்கள் விமான சேவையானது தெற்காசிய பிராந்திய வலயத்தின் மிகச் சிறந்த சேவையாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தெற்காசிய பயண விருந்து வழங்கும் நிகழ்வு ஆண்டு தறும் நடைபெறும் ஒர் நிகழ்வாகும்.
இந்த நிகழ்வானது, தெற்காசியாவின் சிறந்த விருந்தோம்பல் மற்றும் பயணத் தொழில்களைக் கொண்டாடுகிறது.
18 க்கும் மேற்பட்ட பிராந்திய சுற்றுலா நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட பிராந்தியத்தின் மிகச் சிறந்த பயண விருதுகளில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது.
தொழில் வல்லுநர்கள் மற்றும் பயணிகள் ஆகியோரின் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுகிறார்கள்.
இந்த விருது தொழில்துறையின் சிறப்பையும் வாடிக்கையாளர் திருப்தியையும் பிரதிபலிக்கிறது.
எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களால் பிராந்தியத்தில் முன்னணி விமான சேவை நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டதையிட்டு நாங்கள் பெருமையடைகிறோம் என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் இந்திய, பங்களாதேஷ், மற்றும் நேபாளத்தின் பிராந்திய முகாமையாளர் பௌசான் பாரீட் தெரிவித்துள்ளார்.