ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸரல்லா கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய படையினர் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
லெபனானின் பெய்ரூட் நகரத்திற்கு அருகாமையில் நடத்தப்பட்ட பாரிய வான் தாக்குதல் ஒன்றில் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஒரு தொன் எடையுடைய 85 குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் காரணமாக பெய்ரூட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதை போன்று உணர்வு மக்கள் மத்தியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான பாரிய தாக்குதலை மக்கள் இதற்கு முன்னர் எதிர்நோக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறு எனினும் இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டமை குறித்து அந்த இயக்கம் இதுவரையில் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
இதேவேளை, நிராயுதபாணிகளான மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருவதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
இஸ்ரேலிய படையினர் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.