ஐரோப்பியர்களுக்கு மட்டும் சுவிசில் ஏதிலி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் வலதுசாரி கட்சி இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வலதுசாரி கட்சித் தலைவர் மார்சன் டெட்லிங் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஏதிலி கோரிக்கையாளர்களுக்கான உரிமையை மீள் நிர்ணயம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிய நாடான சுவிட்சர்லாந்து உலகில் உள்ள அனைவருக்கும் அடைக்கலம் கொடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் ஏதிலி கோரிக்கையாளர் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 23 வீதமாகும்.
எனவே ஏதிலி கோரிக்கையாளர் எண்ணிக்கையை வரையறுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.