சுவிட்சர்லாந்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கான வாய்ப்பு குறைவாக காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
உயர் பதவிகளில் 22 வீதமான பெண்கள் பதவி வகிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
உயர் மட்ட முகாமைத்துவ பதவிகளில் ஆண்களை விடவும் பெண்கள் குறைந்த அளவில் பதவி வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்ட்ரல் பல்கலைக்கழகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
முகாமைத்துவம் அல்லாத சாதாரண பணிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பதவிகளை வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் உயர்மட்ட முகாமைத்துவ பதவிகளில் ஐந்தில் ஒரு பகுதியில் மட்டுமே பெண்கள் பதவி வகிப்பதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.