சுவிட்சர்லாந்தில் அணு மின் உற்பத்தி நிலையம அமைப்பதற்கு மக்கள் ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
அணு மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அணு மின் ஆலைகளை அமைப்பதற்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்க சுவிட்சர்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சுமார் 53 வீதமானவர்கள் அணு மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுவதனை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.
கடந்த 19ம் திகதி முதல் 22ம் திகதி வரையில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.