சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் குடிநீருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனீவாவின் சுமார் ஒன்பது மாநகரசபைகளில் குடிநீர் மாசடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் போத்தலில் அடிக்கப்பட்ட குடிநீருக்கு கிராக்கி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொதித்து ஆறிய நீரை மட்டும் பருகுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
நிறம் மாறிய அல்லது வழமைக்கு புறம்பான வகையிலான நீரை பயன்படுத்த வேண்டாம் என ஜெனீவா வாழ் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உணவை சுத்தம் செய்வதற்கும், உணவு தட்டுக்களை கழுவுவதற்கும் கொதித்து ஆறிய நீரைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் தொடர்பிலான எச்சரிக்யை தொடர்ந்து இன்றைய தினம் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அதிகளவு குடிநீர் போத்தல்களை களஞ்சியப்படுத்தி வைத்துக் கொண்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.