இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 14 லெபனான் பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனானின் கோலா மாவட்டம் மீது இஸ்ரேல் படையினர் குண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய படையினர் லெபனானின் பல்வேறு பகுதிகளுக்கு தாக்குதல்களை விஸ்தரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 105 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஹிஸ்புல்லா இயக்கம் அண்மைய நாட்களாக பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இயக்கத்தின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து இயக்கம் பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.