சுவிட்சர்லாந்தில் நீல நிறத்திலான கடதாசியிலான ஓட்டுனர் உரிமம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ம் திகதியுடன் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த கடதாசியிலான ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக கடன் அட்டை அளவிலான புதிய ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வகை ஓட்டுனர் உரிமங்களும் தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த கடதாசியிலான நீலநிற ஓட்டுனர் உரிமம் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அபராதம் விதிப்பதற்கு பொலிஸாருக்கு அனுமதியுண்டு என தெரிவிக்கப்படுககின்றது.