சுவிட்சர்லாந்தில் வயோதிபர்கள் தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 85 வயதுக்கும் மேற்பட்ட 90000 பேர் தனிமையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வயதினைச் சேர்ந்த 37 வீதமானவர்கள் இவ்வாறு தனிமையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வயது முதிர்ந்தவர்கள் அதிகளவில் தனிமையை உணர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தனிமையில் இருப்பவர்களுக்கு வேறும் உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய அபாயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மன அழுத்தம், இரத்த அழுத்தம், ஞாபக மறதி உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான முதியவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.