தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டது முதல் வீண் விரயங்களை தடுத்து நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தி வருகின்றது.
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வாகனங்கள் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அந்த வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிரபுகளுக்காக விசேடமாக கடமையில் அமர்த்தப்பட்டு இருந்த போலீஸ் உத்தியோகத்தர்கள் சாதாரண கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோன்று கடந்த அரசாங்க ஆட்சி காலத்தில் நடைமுறை படுத்தப்பட்ட யுக்திய எனும் விசேட போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் வேறு ஒரு நடவடிக்கை அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் விருந்தினர்களாக அழைக்கப்படுவதை தடை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீள பெற்றுக் கொள்ளப்பட உள்ளன.
ஏற்கனவே அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட மதுபானசாலை உரிமங்களை ரத்து செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவ்வாறு பல்வேறு வழிகளில் வீண் விரயங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.