ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை விற்பனை செய்யும் திட்டத்தை புதிய அரசாங்கம் கைவிட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
விமான சேவை நிறுவனத்தை தனியார் பயன்படுத்தும் முயற்சிகள் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பாரியளவு நிதி நட்டத்தை எதிர்நோக்கி இருந்தது.
விமான சேவை நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தேசிய விமான சேவை நிறுவனம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை தலைவர் பேராசிரியர் அணில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
எனவே ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் அல்லது விற்பனை செய்யும் திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு விமான சேவை நிறுவனம் அரசுடமையாக இருக்க வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் சுமார் 510 மில்லியன் டாலர்கள் கடன் பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் 51 வீத அரசாங்க பங்குகளுடன் தனியார் முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு கடந்த அமைச்சரவை திட்டமிட்டு இருந்தது.
எனினும் புதிய அரசாங்கம் இந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது.