இஸ்ரேலிய படையினர் லெபனான் மீது தரைவழி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஹிஸ்புல்லா போராளிகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இவ்வாறு தரைவழி இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே லெபனானின் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
பாரிய அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் சிலர் இஸ்ரேலிய படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் இஸ்ரேல் படையினர் தற்பொழுது தரைவழி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் 60 முதல் 70 வீதம் வரையிலான ஏவுகணை அலகுகள் மீது தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.