ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் ஆயத்தமாகி வருவதாக முன்னதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இஸ்ரேலிய படையினர் லெபனான் மீது தரைவழித் தாக்குதல்களை ஆரம்பித்த நிலையில், ஈரான் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதேவேளை, ஹிஸ்புல்லா போராளிகளும் இஸ்ரேல் மீது ஏவுகளைத் தாக்குதுல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிய அரசாங்கம், இஸரேலின் முக்கிய நிலைகளை தாக்கி அழிப்பதற்கு ஆயத்தமாகி வருவதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.