ஜெனீவாவின் சில இடங்களில் தொடர்ந்தும் குடிநீருக்கு தட்டுப்பாட்டு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில மாநாகரசபைகளைச் சேர்ந்த மக்கள் குழாய் நீரை பருகுவதற்கு முடியாத நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீரின் தரம் குறித்த பூரணமான ஆய்வு முடிவுகள் இன்னமும் கிடைக்கவில்லை.
இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே தற்பொழுது சில இடங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீரில் ஆபத்தான சில வகை பக்றீரியாக்கள் காணப்படுவதாக ஆரம்ப கட்ட சோதனைகளில் தெரியவந்துள்ளதாகவும் இதனை உறுதி செய்வதற்கே மேலதிக ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனீவாவின் 13 மாநகரசபைகளின் குடிநீர் பருகுவதற்கு தகுதியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.