போயிங் 737 ரக விமானங்கள் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகின் சுமார் 40 விமான சேவை நிறுவனங்கள் இந்த விமானங்களை பயன்படுத்தி வருவதாகவும் இவற்றில் தொழில்நுட்பக் கோளாறு காணப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் ரட்டர்( rudder ) எனப்படும் சுக்கான் பகுதியில் சில தொழில்நுட்ப கோளாறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை இது தொடர்பிலான எச்சரிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சுமார் 40க்கு மேற்பட்ட விமான சேவை நிறுவனங்கள் போயிங் 737 என்ற விமானத்தை பயன்படுத்துகின்றன.
எனினும் இந்த விமானத்தின் சுக்கான்களில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் காணப்படுவதாகவும் இது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுக்கான்கள் இயந்திர கோளாறுக்கு உட்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமானத்தின் சுக்கான் உரிய முறையில் செயல்படாத சந்தர்ப்பங்கள் தொடர்பில் அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு சபை பல்வேறு தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
ஒரு விமானத்தை நேராக பயணிக்கச் செய்வதற்கும் திசை திருப்புவதற்கும் இந்த சுக்கான் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாகவே போயிங் விமானங்களில் பல்வேறு கோளாறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போயிங் விமான உற்பத்தி நிறுவனம் உலகின் முதல் நிலை விமான உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.