லெபனானில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சுவிட்சர்லாந்து கரிசனை வெளியிட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் வன்முறைகளை கைவிட வேண்டுமென சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் சுமார் 1200 சுவிட்சர்லாந்து பிரஜைகள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதாபிமான சட்டங்கள் உள்ளிட்ட சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
லெபனானுக்கான பயணங்களை தவிர்க்குமாறு சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.