இஸ்ரேலிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டாரசிற்கு தடை விதித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தமது நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானிய ஏவுகணை தாக்குதலை அன்டானியோ குட்டாராஸ் கண்டிக்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு சமூக ஊடகத்தில் இது தொடர்பில் பதிவு ஒன்றை இட்டுள்ளது.
நிபந்தனை அற்ற வகையில் ஈரானின் கொடூரமான தாக்குதலை கண்டிக்க தவறும் எவரும் இந்த நாட்டுக்குள் பிரவேசிக்க அருகதையற்றவர்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித:துள்ளது.
ஈரானிய படையினர் நேற்றைய தினம் இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல்களை நடத்தி இருந்தனர். சுமார் 200 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஒரு பின்னணியில் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் இந்த தாக்குதலை நிபந்தனையற்ற அடிப்படையில் கண்டித்திருந்தன.
எனினும், ஐக்கிய நாடுகள் அமைப்பு இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க தகுதியற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட்டாராஸ் தீவிரவாதிகள், பாலியல் குற்றவாளிகள் மற்றும் கொலைவாளிகள் ஆகியோரை ஆதரிப்பதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
குறிப்பாக ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹுதி போராளிகளை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தமது நாட்டு பிரஜைகளை பாதுகாப்பதற்கும் தேசத்தின் கௌரவத்தை நிலை நாட்டுவதற்கும் தொடர்ந்து போராடும் எனவும் அதற்கு அன்டனியோ குட்டாரசின் ஆதரவு தேவையில்லை எனவும் அறிவித்துள்ளது.