மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் பல்வேறு வழிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலைமையினால் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர் பதற்றம் காரணமாக ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 70.86 டொலர்களாக அதிகரித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல் நிலைமைகளை கருத்தில் கொண்டு இவ்வாறு எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய படையினர் லெபனான் மீது தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, இஸ்ரேல் மீது ஈரான் நேற்றைய தினம் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி இருந்தது இவ்வாறான ஓர் போர் பதற்றத்திற்கு மத்தியில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விலை அதிகரிப்பு உலக பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.