ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு பேரவையின் தலைமை பொறுப்பு சுவிட்சர்லாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் இவ்வாறு பாதுகாப்பு பேரவையின் தலைமை பொறுப்பு உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும் அந்த வகையில் இரண்டாவது தடவையாக சுவிட்சர்லாந்துக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்திற்கான கூட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து தலைமை தாங்க உள்ளது மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில் இந்த பதவியை சுவிட்சர்லாந்து பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் தீர்மானங்கள் அமுல்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிறந்தது சமாதானத்தை உருவாக்கவும் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.