சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது.
பருகக் கூடிய நீர் தொடர்பில் ஜெனிவாவின் பல மாநகர சபைகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக குழாய்களில் விநியோகம் செய்யப்படும் நீரில் நுண்ணுயிர் தாக்கம் காணப்படுவதாகவும் இதனால் குழாய் நீரை பருக வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த மூன்று நாட்களாக இந்த எச்சரிக்கை அறிவிப்பு நடைமுறையில் இருந்தது.
எனினும் தற்பொழுது குறித்த எச்சரிக்கை அறிவிப்பு தளர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவகை பாக்டீரியா இந்த நீரில் கலந்து இருப்பதாக முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எவ்வாறு எனினும் தீவிர பரிசோதனைகளின் பின்னர் இந்த நீர் பருகுவதற்கு உகந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குழாய் நீரை பருகுவோர் எவ்வித மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.