இஸ்ரேலிலிருந்து வெளியேறுமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு ரஸ்யா அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பிராந்திய வலயத்தில் போர் பதற்றம் நிலவும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமது நாட்டுப் பிரஜைகளின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
லெபனானில் தங்கியுள்ள தமது நாட்டுப் பிரஜைகளையும் அங்கிருந்து வெளியேறுமாறு ரஸ்யா கோரியுள்ளது.
லெபனானில் தங்கியுள்ள ரஸ்ய ராஜதந்திரிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காலம் தாழ்த்தாது தமது நாட்டுப் பிரஜைகள் இஸ்ரேலை விட்டு வெளியேற வேண்டுமென ரஸ்ய வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக கோரியுள்ளது.