இஸ்ரேலுக்கான விமானப் பயணங்களை ரத்து செய்வதாக இலங்கை அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமால் பண்டார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலயத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 7ம் திகதி வரையில் இஸ்ரேலுக்கான விமாப்பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 7ம் திகதி வரையில் பயணங்களை திட்டமிட்டிருந்தவர்கள் தங்களது இஸ்ரேல் பயணத்தை மீள ஒழுங்கு செய்து கொள்ள வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது அண்மையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பிராந்திய வலயம் முழுவதிலும் போர் பதற்றம் நிலவி வருகின்றது.