ஜப்பானிய விமான நிலையத்தில் புதைக்கப்பட்ட அமெரிக்க வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது.
இதன் காரணமாக 80 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஒரு டாக்ஸி பாதையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
சிறிய குண்டுவெடிப்பு சுமார் ஏழு மீற்றர் அகலத்தில் ஒரு துளையை உருவாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்தச சம்பவத்தினால் எந்த உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை மற்றும் அந்த நேரத்தில் எந்த விமானமும் அருகாமையில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாசாகி விமான நிலையத்தில் இந்த குண்டு வெடித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது இந்த குண்டு வீசப்பட்டதாக நம்பப்படுகின்றது.
குண்டு வெடிப்பு காரணமாக மூடப்பட்ட விமான நிலையத்தை இன்று திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் குண்டு ஒன்றினால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில், வெடிக்காத குண்டுகள் நாடு முழுவதும் புதைந்துண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 41 தொன் எடையுள்ள 2,348 குண்டுகள் அகற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.