மின்னணு வீசா வழங்கும் நடைமுறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளது.
வீ.எப்.எஸ் குளோபல் என்ற நிறுவனத்திடம் வீசா விண்ணப்பங்களை கையாளும் பொறுப்பு வழங்கப்பட்டதன் மூலம் பாரிய மோசடி இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வீசா வழங்கும் பொறுப்பு வழங்கப்பட்டதன் மூலம் பாரிய நிதி மோசடி இடம் பெற்றதாகவும் நபர்களின் தனிப்பட்ட தகவல்களின் ரகசிய தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், ரவூப் ஹக்கீம் மற்றும் சாம்பிக்க ரன்னவக்க ஆகியோர் இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சில மாத இடைவெளியில் இந்த மோசடி குறித்த கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஈ-கடவுச்சீட்டுகள் கொள்வனவு குறித்த நடைமுறைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.