இஸ்ரேலின் மீது மீண்டும் நடத்த நேரிடும் என ஈரான் கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவசியம் ஏற்பட்டால் மீண்டும் இஸ்ரேலை தாக்குவதற்கு தயங்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.
ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி குமெய்னி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னதாக இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் மிகக் குறைந்த அளவிலான ஓர் தண்டனை என அவர் தெரிவித்துள்ளார்.
தமது நாட்டு படையினர் அண்மையில் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் முழு அளவில் சட்டத்திற்கு உட்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் மட்டும் ஹிஸ்புல்லா போராளிகளை ஒருநாளும் இஸ்ரேலினால் அழித்துவிட முடியாது என அல்கொமெய்னி தெரிவித்துள்ளார்.