சுவிட்சர்லாந்தில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் போக்கு பதிவாகியுள்ளது.
உலக நாடுகளில் பொருளாதார நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் சுவிட்சர்லாந்திலும் அதன் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து பொருளாதார விவகார செயலகம் இந்த தகவலை வழங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 2.5 வீதமாக பதிவாகியுள்ளது.
இது ஆகஸ்ட் மாத எண்ணிக்கையை விட சிறிதளவில் அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் வேலையற்றோர் எண்ணிக்கை 2.3 வீதமாக காணப்பட்டது.
செப்டம்பர் மாத இறுதியளவில் 113245 பேர் வேலை வாய்ப்புக்காக பிராந்திய வேலைவாய்ப்பு நிலையங்களில் தங்களை பதிவு செய்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
அதிக எண்ணிக்கையிலானவர்கள் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.