லெபனானுக்கு பல்வேறு ஆச்சரியங்கள் காத்திருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலான்ட் தெரிவித்துள்ளார்.
லெபனானில் முன்னெடுக்கப்படும் இராணுவத் தாக்குதல்களில் பல்வேறு ஆச்சரியங்களை வெளிப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிராளிகளை இல்லாதொழிக்கும் வகையில் லெபானனில் தாக்குதல்கள் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலின் ஆயுதங்கள் தொடர்பில் ஆச்சரியங்கள் வெளிப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் தொடர்பாடல் பிரிவு தலைவர் ராசீட் சகாபீ உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலிய படையினர் லெபானனின் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.