இலங்கைக்கும் லண்டனுக்கும் இடையிலான விமான பயண பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் கொழும்பிலிருந்து லண்டனுக்கும் லண்டனில் இருந்து கொழும்பிற்கும் மேற்கொள்ளும் பயணங்களின் போது இந்த புதிய விமான பாதை பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ஈராக் விமான பாதையை தவிர்ப்பதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி கொழும்பிலிருந்து லண்டனுக்கு பயணம் செய்யும்போது எகிப்து விமான பாதையின் ஊடாக பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இவ்வாறு விமான பயண பாதையில் ஏற்படும் மாற்றம் காரணமாக பொதுவாக கொழும்பிலிருந்து லண்டனுக்கு மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கான பயண நேரத்தை விட அரை மணித்தியாலம் கூடுதலான நேரத்தை செலவழிக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் விமான சேவை நிறுவனத்தின் எரிபொருள் செலவும் அதிகரிப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.