இஸ்ரேல் மீது ஏழு முனைகளில் போர் தொடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி சுமார் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
தற்போது தனது நாடு ஏழு முனைகளில் போராடி வருவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாகரிகத்தின் எதிரிகளுக்கு எதிராக ஏழு முனைகளில் தன்னைப் பாதுகாத்து வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய ஆதரவுடைய ஹிஸ்புல்லா, காசாவில் ஹமாஸ், யேமனில் ஹூதிகள், மேற்குக் கரையில் “பயங்கரவாதிகள்” மற்றும் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஷியா போராளிகள் ஆகியோரை எதிர்த்து போராடுவதாக நெதன்யாகூ தெரிவித்துள்ளார்.
இந்த ஏழு தரப்புக்களுக்கு பின்னணியிலும் ஈரான் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என குறிப்பிட்டுள்ளார்.