எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் அதன் விமானங்களில் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை தடை செய்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினால் பயன்படுத்தப்பட்ட இத்தகைய சாதனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இஸ்ரேலிய படையினர் இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
டுபாயிலிருந்து அல்லது டுபாய் வழியாக விமானங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பயணிகளின் கைப்பைகள் மற்றும் பயணப் பொதிகள் போன்றனவற்றில் எடுத்துச் செல்ல முடியாது எனவும் இதுபோன்ற பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால் டுபாய் காவல்துறையால் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.
லெபனான் முழுவதும் பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்த சில வாரங்களுக்குப் பின்னர், வாக்கி-டாக்கிகள் இதே பாணியில் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.