இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் தற்பொழுது கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
இஸ்ரேலிய படையினர் அண்மையில் லெபனான் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல் ஹிஸ்புல்லா போராளிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டு இருந்தது.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டிருந்தார். அவரது இரண்டாம் நிலைத் தலைவரும் கொல்லப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து ஈரானிய படையினர் இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணைகளை ஏவி இருந்தனர்.
இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உண்டு மேலும் ஈரானிடமும் அவ்வாறான அணு ஆயுதங்கள் இருக்கக் கூடும்.
அண்மையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் ஈரானிடம் அணு ஆயுதங்கள் உண்டா ஏற்கனவே அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டு களஞ்சிய படுத்தப்பட்டுள்ளனவா? ஏதேனும் போர் நிலைமைகளில் இந்த அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா? அல்லது இஸ்ரேல் அணுகுண்டை வெடிக்கச் செய்யுமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
ஈரானினால் அணுகுண்டை வெடிக்கச் செய்ய முடியுமா?
இல்லை ஈரானிய அரசாங்கத்தினால் உடனடியாக அணுகுண்டை வெடிக்கச் செய்ய முடியாது என ஜெனீவா பாதுகாப்பு கொள்கை குறித்த சிரேஸ்ட ஆலோசகர் மார்க் பினாவுட் (Marc Finaud) தெரிவித்துள்ளார்.
ஈரானிடம் தற்பொழுது அணு ஆயுதங்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்ட அணுத்திட்ட உடன்படிக்கையின் ஊடாக ஈரானினால் அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியாது.
ஈரானுக்கு அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கும் எவ்வளவு காலம் தேவை?
ஈரானுக்கு ஒன்று, இரண்டு வாரங்களில் அணு ஆயுதத்திற்கு தேவையான பொருட்களை திரட்ட முடியும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் அன்தனி பிலிங்கன் கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார்.
பூரண அணு ஆயுதமன்றை உற்பத்தி செய்வதற்கு ஈரானுக்கு ஆறு முதல் 18 மாதங்கள் தேவைப்படும் என அஸ்தெத் ஸமாரியாட் என்ற ஜெர்மன் பாதுகாப்பு ஆலோசக்காரர் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடிய மூலப் பொருட்கள் அனைத்தும் ஈரானிடம் உண்டு என்பதை உறுதி செய்ய ஆதாரங்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உண்டா?
இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக இதனை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சில ஆண்டு காலமாகவே இஸ்ரேலிடம் எண்பது முதல் 200 அணு ஆயுதங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய ஆபத்து உண்டா?
1967 மற்றும் 1973 ஆம் ஆண்டுகளில் அரபிய நாடுகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
அதன் பின்னர் இஸ்ரேல் அணு ஆயுதங்களை உருவாக்கியது.
தவறுதலாக இஸ்ரேல் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் அடுத்த கட்ட நகர்வின் அடிப்படையிலேயே அணுவாயுத பயன்பாடு இடம்பெறுமா இல்லையா என்பது நிர்ணயிக்கப்பட உள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை பெற்றுக்கொண்டால் சவூதி, எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் அணுவாயுதங்களை கோரும் எனவும், இது பிராந்திய வலயத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் என்பதுடன் அணுவாயுதப் போர் மூழும் அபாயங்களும் காணப்படுவதாக பாதுகாப்புதுறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.