சுவிட்சர்லாந்தில் ராபீஸ் வைரஸ் தொற்றுக்கு இலக்கான வெளாவல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் கிழக்குப் பகுதியான கிளாரஸ் கான்டனில் குறித்த வௌவால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
1992ம் ஆண்டின் பின்னர் இவ்வாறான ஏழு சந்தர்ப்பங்களே பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் வளர்ப்பு பிராணிகள் மற்றும் வனவிலங்குகள் மத்தியில் ராபீஸ் வைரஸ் கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
பொதுவாக இவ்வாறான வைரஸ் தாக்கம் பதிவாவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், இந்த ராபீஸ் வைரஸ் தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.