உலகின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ் நிறுவனம் ஈரானுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் ஈரானிலிருந்தும் ஈரானுக்கானதுமான விமானப் பயணங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இன்றைய தினத்திற்கான விமானப் பயணங்கள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிராந்திய வலயத்தின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் என விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
ஈரானிய அரசாங்கம் அண்மையில் இஸ்ரேல் மீது பாரியளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து பிராந்திய வலயத்தில் போர் மூழும் அபாய நிலைமை உருவாகியுள்ளது.