லெபனானின் பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவர் காயமடைந்துள்ளார்.
சுவிட்சர்லாந்து ஊடகங்கள் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்தவர் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
எனினும் காயமடைந்தவர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படையினர் பெய்ரூட் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது லெபனானில் சுமார் 1200 சுவிட்சர்லாந்து பிரஜைகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.