காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது.
பலஸ்தீன சுகாதார அமைச்சு இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதுவரையில் இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல்களில் 42010 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல்களில் 97270 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 45 பாலஸ்தீன பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7ம் திகதி முதல் இவ்வாறு இஸ்ரேலிய படையினரின் தாக்குதல்களில் நாள்தோறும் பலஸ்தீன பிரஜைகள் உயிரிழந்து வருகின்றனர்.