அமெரிக்காவில், வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் விமானி உயிரிழந்த காரணத்தினால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
துருக்கி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் விமானியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எயார்பஸ் ஏ350 விமானமொன்றை செலுத்திய 59 வயதான விமானி விமானத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது சுயநினைவை இழந்துள்ளார்.
குறித்த விமானிக்கு முதலுதவி வழங்கப்பட்ட போதிலும் அவர் நடு வானிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சக விமானி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.
துருக்கி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் அமெரிக்காவின் சீடெல்லிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் பயணம் செய்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் இதனால் விமானம் நியூயோர்க்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் குறித்த விமானி விமான சேவை நிறுவனத்தில் கடமையாற்றி வந்ததாகவும், இந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் சித்தி எய்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நியூயோர்க்கில் தரையிறக்கப்பட்ட விமானம் மீண்டும் இஸ்தான்புல் நோக்கிப் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.