ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வம் ஆண்டு முதல் எதிர்வரம் 2027ம் ஆண்டு வரையில் சுவிட்சர்லாந்து மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடாக திகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தை உறுப்பு நாடாக ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவாக 183 நாடுகளில் 175 நாடுகள் வாக்களித்துள்ளன.