சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளப் பிரச்சினையை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
நாடாளுமன்றின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு சம்பளப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்குவதில் தாமத நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுவிட்சர்லாந்து நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 246 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கான நாளாந்த கொடுப்பனவு மற்றும் செலவுக் கொடுப்பனவுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வருடாந்த கொடுப்பனவாக 45561 பிராங்குகளையும், அமைச்சர் ஒருவர் வருடாந்த கொடுப்பனவாக 54849 பிராங்குகளையும் பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.