இந்தியாவின் டாட்டா வியாபார குழுமத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபரும் சமூக சேவகருமான ரத்தன் டாடா காலமானார்.
ரத்தன் டாடா தனது 86 வயதில் காலமானார் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நல்ல நண்பரையும் ஓர் வழிகாட்டியையும் இழந்து விட்டதாக டாட்டா சன்ஸ் குழும நிறுவனத்தின் தற்போதைய தலைவர் என்.சந்திரசேகரன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
உடல் நிலையை சரியில்லாத காரணத்தினால் அண்மையில் மும்பையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ரத்தன் டாடா சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான ரத்தன் டாட்டா பல்வேறு வியாபார முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் செல்வந்தர்கள் வரிசையில் ரத்தன் டாடா முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தன் டாடாவின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் வெளியிட்டுள்ளார்.
தூரநோக்குடைய கருணை உள்ளமும் கொண்ட சிறந்த மனிதர் என அமரர் ரத்தன் டாடாவிற்கு, இந்திய பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.