வானில் பறந்து கொண்டிருந்த ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவன விமானமொன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து ரியாத் நோக்கிப் பயணம் செய்த விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல்.265 என்ற விமானம் கொழும்பிலிருந்து ரியாத் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
புறப்பட்டு சில நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை அடிப்படையில் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திருப்பபட்டுள்ளது.
விமானம் எவ்வித விபத்தும் இன்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானப் பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மற்றுமொரு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.