ஐக்கிய நாடுகள் படையினரின் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
லெபனானின் பெய்ரூட்டில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் படை தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு ஐக்கிய நாடுகள் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய படையினர் நடத்திய எறிகணை தாக்குதலில் இரண்டு ஐக்கிய நாடுகள் படையினர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் அவசர கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
உடனடியாக தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என மீண்டும் சுவிட்சர்லாந்து கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு படையினருக்கு இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா படையினர் பூரண பாதுகாப்பினை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் படைப்பிரிவில் கடமையாற்றி வந்த இரண்டு இந்தோனேசிய பிரஜைகளே காயமடைந்துள்ளனர்.
அண்மைய நாட்களாக லெபனானில் நிலை கொண்டுள்ள ஹிஸ்புல்லா போராளிகள் மீது இஸ்ரேல் படையினர் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் படை முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இவ்வாறு கண்டனத்தை வெளியிட்டுள்ளது.