தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரையில் மொத்தமாக 347 பில்லியன் ரூபா கடன் பெற்றுக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றுக் கொண்டது முதல் இதுவரையில் இவ்வாறு கடன் தொகை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு சந்தேகங்களில் இவ்வாறு கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என பேராசிரியர் அமைந்த அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிபீட பேராசிரியராக அமைந்த மெத்சில கடமையாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் திரைசேரி உண்டியல்கள் மற்றும் பிணை முறிகளுக்கு இன்றளவிலும் நல்ல கேள்வி காணப்படுவதாகவும் இதற்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்பட இணங்கியுள்ளமையே காரணம் என தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைவதற்கு மித மிஞ்சிய அளவில் கடன் பெற்றுக் கொண்டமையே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
கடன் ஸ்திரத்தன்மையைப் பேண வேண்டும் என்ற முதல் நிபந்தனைக்கு உட்பட்டு சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.