பொதுத்தேர்தலில் ராஜபக்ச குடும்பதினர் நேரடியாக போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ கோட்டபாய ராஜபக்ஷ முன்னாள் அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, சமால் ராஜபக்ஷ ஆகியோர் தேர்தலில் போட்டியிடவில்லை.
அமைச்சர் நாமல் ராஜபக்ச இம்முறை பொது தேர்தலில் எந்தவொரு மாவட்டத்திலும் போட்டியிடவில்லை.
மாறாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளராகவே போட்டியிடுகின்றார்.
சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் இலங்கை ஆட்சி அதிகாரத்தில் பெரும் தாக்கத்தை செலுத்தி வந்த ராஜபக்ச குடும்பத்தினர் இம்முறை பொதுத் தேர்தலில் ஒரங்கட்டப்பட்ட நிலையை அவதானிக்க முடிகின்றது.