எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
22 தேர்தல் மாவட்டங்களில் 690 கட்சிகள் மற்றும் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாறர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 22 தேர்தல் மாவட்டங்களிலும் மொத்தமாக 764 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.
எனினும், இதில் 74 குழுக்களின் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக எந்தவொரு தப்பேனும் கருதினால் அவர்களுக்கு நீதிமன்றின் உதவியை நாட முடியும் என சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை அதிக எண்ணிக்கையிலான குழுக்கள் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் 64 குழுக்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகல் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான கட்சிகள் மற்றும் குழுக்கள் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு மாவட்டங்களிலும் தலா பதினைந்து குழுக்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கம் வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.